சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பார்க்கிங் இடம் மற்றும் மாற்று வழிகள் குறித்து வரைபடத்துடன் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. நாளை சென்னை, மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.