காயளான் கடை குடோன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

80பார்த்தது
பல்லாவரம் செல்லும் சாலை, குன்றத்தூர் அடுத்த கரைமா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் செயல்பட்டு வந்தது நேற்று மாலை அங்கு பழைய பொருட்களை சில தரம் பரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென குடோனில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது இதனை கண்டதும் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த நிலையில் அருகில் குடியிருப்பு வாசிகள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயானது மள மளவென குடோன் முழுவதும் பரவியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது இது குறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் இதில் குடோன் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது மேலும் குடியிருப்புகளுக்கு மத்தியில் காயளான் கடை குடோன் செயல்பட்டு வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். சாலையோரத்தில் இருந்த காயளான் கடை குடோன் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் தீ விபத்திற்கு காரணம் மின்கசிவா அல்லது நாசவேலை காரணமா என குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி