திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்கள் பதிவு செய்வதற்கு இடைத்தேர்தல் மூலம் அதிகாரிகள் கையூட்டு பெறுவதாக தொடர்ந்து வந்த புகாரைத் தொடர்ந்து, திருவள்ளூர் கையூட்டு ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர், அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் அலுவலகத்திற்குள் நடமாடிய நபர்களையும், அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர், சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது, மேற்கொண்ட 4 மணி நேர சோதனையின் போது பத்திர பதிவு அலுவலகத்தில் கட்டுவிரியன் பாம்பு இருந்துள்ளது அந்த பாம்பை கண்டதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அலறி அடித்து ஓடினர், பின்னர் பாம்பை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொன்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது