விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

84பார்த்தது
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாராட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில்
நடைபெற்றது. ஏரி குளங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை
அகற்றவேண்டும் ஏரி கால்வாய்களை சீரமைக்க வேண்டும் எனவும்
நெற்பயிர் விவசாயத்திற்கு
காப்பீடு தொகை முறையாக
வழங்கபடவில்லை எனவும் கால்நடைகள் மேய்வதற்கு உரிய மேய்க்கால் அரசு புறம்போக்கு இடங்களைஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் எனவும் விவசாயிகள் சார்பில்
கோரிக்கை வைத்தனர். நெடுஞ்சாலைத்துறை
செயற்பொறியாளர் பேரூராட்சி செயல் அலுவலர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசுத்துறை அதிகாரிகள் முறையாக கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பதில் அளிக்க வருவதில்லை என்றும் சார் ஆட்சியரிடம் விவசாயிகள் குற்றம் சாட்டியதுடன் கூட்டத்தில் பங்கேற்காத அரசு துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
நாய்கள்
கடித்தால் அதன்மூலம்
ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசியானது அரசு கால்நடை மருத்துவமனைகளில் இல்லை எனவும் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி