திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி
சார்பில் ஆலோசனைக் கூட்டம் பெரியபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்
எம்எஸ்கே ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்றது முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில்
ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இதில் பேசிய மாவட்ட கழக பொறுப்பாளர் ரமேஷ்
திமுக கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் முதல்வர் ஸ்டாலினை போல் சுறுசுறுப்பாக இளைஞர்கள் பணியாற்றினால் பல்வேறு பதவிகள் மற்றும் பொறுப்புகள் அவர்களை வந்து சேரும் முதல்வர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட இளைஞர் அணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் மாவட்ட கழகமாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் உள்ளது
தயங்காமல் உதவி கேளுங்கள் செய்து தருகிறோம் என்றும்
முதல்வரின் சாதனைகளை இளைஞர் அணி அமைப்பினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் இளைஞர்களை வேறு கட்சிகளுக்கு சென்று விடாத வகையில் அவர்களை திமுகவில் இணைத்து கட்சியில் பதவிகளை வழங்கிட இளைஞர் அணி அமைப்பினர் சிறப்பாக செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.