திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சி கல்லூரியில் உயர்கல்வி உறுதி திட்டம் புதுமைப்பெண் திட்ட பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் மு. க. ஸ்டாலின்வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பினார். இந்த வாழ்த்து மடலை கல்லூரியில் பயிலும் இது திட்ட பயனாளிகளான மாணவிகளுக்கு நேரில் வாசித்துக் காட்டும் நிகழ்ச்சி கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் தில்லைநாயகி தலைமையில் புதுமைப்பெண் திட்ட மேற்பார்வையாளர் கல்லூரி நூலகர் டாக்டர் கிரேஸ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டம் குறித்தும் உயர்கல்வி உறுதிக்கு வழி வகுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கல்விப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து முதலமைச்சர் அனுப்பிய வாழ்த்து மடலை பயனாளிகள் இடத்தில் வாசித்து காட்டி முதலமைச்சர் சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.