கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா

56பார்த்தது
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, வடக்கு பகுதி, 23a வார்டு மகளிர் அணி சார்பில், காவாங்கரையில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

இவ்விழாவில் மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தில் புழல் நாராயணன் அவர்கள், கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி