போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்.

57பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த மேலூரில் இயங்கி வரும் அக்னி சிறகுகள் சமூக நல அறக்கட்டளை சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பட்ட மந்திரியில் இருந்து மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மீஞ்சூர் காவல் உதவி ஆய்வாளர் சாந்தி கொடியை சேர்த்து துவக்கி வைத்தார். பின்னர் மேலூர் அரசு பள்ளி அருகே கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. பரதநாட்டியத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பரை இசைத்தல், சிலம்பாட்டம் குத்துச்சண்டை, போதைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகங்கள் நடைபெற்றது. அக்னி சிறகுகள் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு போதையில் இருந்து விடுபடுவதற்காக வழிமுறைகளை கூறி ஆலோசனைகளை வழங்கினார். சமூக ஆர்வலர் அன்பாலயா சிவகுமார். தமிழ் ஆசிரியர் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வி சீரனை வழங்கினர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்கள் கலைத்திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி