மதுரவாயல் - Maduravayal

திருத்தணி: தாய் உயிரிழந்த சோகத்திலும் பொதுத் தேர்வு எழுதிய மாணவி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மலர் அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மலரை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இந்த நிலையில் மலர் உடலை இன்று அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்து வரும் நிலையில் மலரின் மகள் மகாலட்சுமி அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத கண்ணீருடன் சென்ற சம்பவம் காண்போரை சோகத்தை ஏற்படுத்தியது. தாய் உயிரிழந்த சோகத்திலும் தேர்வு எழுத சென்ற சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கூலி நெசவுத்தொழில் செய்து மகன் மற்றும் மகளை மலர் வளர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా