சேதமான சாலையோர தடுப்பு சீரமைக்கப்படுமா?

69பார்த்தது
சேதமான சாலையோர தடுப்பு சீரமைக்கப்படுமா?
பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து பொதட்டூர்பேட்டைக்கு தார் சாலை உள்ளது. ஆர். கே. பேட்டை, சோளிங்கர், ஸ்ரீகாளிகாபுரம், அம்மையார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நெசவாளர்கள் இந்த வழியாக பொதட்டூர்பேட்டைக்கு இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். பல்வேறு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த மார்க்கத்தில், அத்திமாஞ்சேரிபேட்டையை ஒட்டி ஏரிக்கரை மீதான சாலை பகுதியில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக, இரும்பு தடுப்புகள் நடப்பட்டுள்ளன. இந்த தடுப்புகள் தற்போது சிதைந்துள்ளன. பாதுகாப்புக்காக நடப்பட்ட இரும்பு தடுப்பு, தற்போது விபத்து ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் இரும்பு தடுப்பு, புதரில் மறைந்தும் கிடக்கின்றன. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, சாலையோர இரும்பு தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி