மின் வாரியம் தோண்டிய பள்ளம் தடுப்புகள் இல்லாததால் அச்சம்

53பார்த்தது
மின் வாரியம் தோண்டிய பள்ளம் தடுப்புகள் இல்லாததால் அச்சம்
போரூரில், மின் கேபிள் பதிக்கும் பணிக்காக இரு மாதங்களுக்கு முன் பள்ளங்கள் தோண்டப்பட்ட நிலையில், இன்னும் பணிகள் நிறைவு பெறாததால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

போரூர், வயர்லஸ் ஸ்டேஷன் சாலையிலுள்ள துணை மின் நிலையத்தில் இருந்து, வளசரவாக்கம் எஸ். ஆர். எஸ். , கார்டன் அருகே உள்ள துணை மின் நிலையத்திற்கு, 3 கி. மீ. , துாரம், மின் கேபிள் புதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக போரூர், 153வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெரு, வன்னியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் பள்ளங்கள் தோண்டி இரு மாதங்களாகியும், இன்னும் பணிகள் முடியாததால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

அத்துடன், பள்ளங்களை சுற்றி முறையாக தடுப்புகள் அமைக்கப்படவில்லை. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின் வாரிய பணிகளை விரைந்து முடித்து, பள்ளங்களை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி