அரசு பள்ளியில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது

50பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் முருகப்பா நகர் பகுதியில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. 110 மாணவர்களுக்கு மேல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்த பள்ளியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் மிகவும் சேதமடைந்த கட்டிடத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
பாடடைந்த கட்டிடத்தை சீரமைக்க கோரி திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும்
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் மாலை வழக்கம் போல் வீட்டிற்கு சென்றனர்.
மாணவர்கள் சென்ற 10 நிமிடத்தில் திடீரென்று அந்த கட்டிடத்தின் மேற்கூறையில் மின்விசிறி இருந்த பகுதியில் இடிந்து கீழே விழுந்துள்ளது. இதில் கீழே இருந்த பிளாஸ்டிக் சேர் அனைத்தும் உடைந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்தக் கட்டடத்தில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 10 நிமிடத்திற்கு முன்பாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்தி