மத்துார் கால்நடை மருந்தகம் பாராக மாறிய அவலம்.

53பார்த்தது
மத்துார் கால்நடை மருந்தகம் பாராக மாறிய அவலம்.
திருத்தணி ஒன்றியம் மத்துார் பகுதியில் கால்நடை மருந்தகம் இயங்கி வருகிறது. இந்த மருந்தகத்திற்கு மத்துார், மூலமத்துார், கொத்துார், அலுமேலுமங்கா புரம், பொன்பாடி, வள்ளூவர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது கால்நடைகளை சிகிச்சை அழைத்து வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த மருந்தகம் பொன்பாடி ரயில்வே கேட்டில் இருந்து மத்துார் ஊராட்சிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது.


இதுதவிர கால்நடை மருந்தகத்தில் இருந்து, 500 மீட்டர் துாரத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இங்கு மதுபானங்கள் வாங்கும் மதுபிரியர்கள், நேராக கால்நடை மருந்தகம் கட்டடம் முன் அமர்ந்து மது அருந்தி விட்டு, பாட்டில்கள், டம்ளர்களை அங்கேயே போட்டு செல்கின்றனர். கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை.

இதனால், கால்நடை மருந்தகத்திற்கு வரும் மருத்துவர் முகம் சுளிப்பதுடன், அவரே சுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி