டி. ஆர். பாலுக்கு சாக்லேட் மாலை அணிவித்து வரவேற்பு

51பார்த்தது
டி. ஆர். பாலுக்கு சாக்லேட் மாலை அணிவித்து வரவேற்பு
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் திமுக கட்சி பொருளாளர் டி. ஆர். பாலு வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் தொகுதிக்கு உட்பட்ட மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக காரம்பாக்கம், வானகரம் பகுதியில் தேர்தல் பரப்புரை செய்த நிலையில் வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக வானகரம் ஊராட்சி திமுக சார்பில் சாக்லேட் மாலை அணிவித்தும் பெண்கள் பழ சீர் தட்டு வரிசைகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பின் போது மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் க. கணபதி , வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அ. ம. துரைவீரமணி,  விவாசய மாவட்ட அமைப்பாளர் S. p. அருள்,  ஒன்றிய அவைத் தலைவர் ஜெயச்சந்திரன்,  மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் வானகரம் A. m. பர்மன். mc. ,  முன்னாள் வார்டு செயலாளர் எம். கே. மகாதேவன், சதீஸ்குமார் 

உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் இருந்தனர். வானகரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முக்கிய சாலைகளில் டி. ஆர். பாலு திறந்த வெளி ஜீப்பில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் செல்லும் இடமெல்லாம் திமுகவினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி