மழைநீர் வடிகாலில் கழிவுநீர் - மதுரவாயலில் தொடருது அத்துமீறல்

53பார்த்தது
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் - மதுரவாயலில் தொடருது அத்துமீறல்
வளசரவாக்கம் மண்டலத்தில், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், வடிகால் வாயிலாக மதுரவாயல் மேம்பாலம் அருகே, கூவம் ஆற்றில் கலக்கிறது.

அதேபோல், வானகரம் ஊராட்சியில் இருந்து வெளியேறும் மழைநீர், வானகரம் பிரதான சாலையிலுள்ள மழைநீர் வடிகால் வழியாகச் சென்று, கூவத்தில் கலக்கிறது.

மழைநீர் செல்ல வேண்டிய இந்த வடிகாலில், சட்ட விரோதமாக கழிவுநீர் விடப்படுகிறது. இந்த கழிவுநீர், மழைநீர் வடிகால் வழியாகச் சென்று, கூவம் ஆற்றில் கலக்கிறது.

இந்த கழிவுநீர் ரசாயனம் கலந்தது போல், சாம்பல் நிறத்தில் உள்ளது. மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதும், தொழிற்சாலை கழிவுகள் விடப்படுவதும் இதனால் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

எனவே, கூவம் ஆற்றில் மழைநீர் வெளியேற இணைக்கப்பட்டுள்ள வடிகாலில், கழிவுநீர் விடப்படுவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி