இரு நாள் பூப்பந்து கிரிக்கெட் போட்டி

60பார்த்தது
செங்குன்றத்தில் பிரண்ட்ஸ் ஆப் மதன் சிசி சார்பாக இரு நாள் பூப்பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பிரண்ட்ஸ் ஆப் மதன் சிசி சார்பாக செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இரு நாள் பூப்பந்து கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் பாடியநல்லூரைச் சேர்ந்த பிஎஸ்கே அணியினர் வின்னராகவும் ரெட் ஆர்ட்ர்ஸ் அணியினர் ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற இரு அணி வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 20000 ம் இரண்டாம் பரிசாக ரூபாய் 10000 ம் வழங்கப்பட்டது. இதில் செங்குன்றம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சாய் கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளையும் வெற்றிகோப்பையும் வழங்கினார். நிகழ்ச்சியில் செங்குன்றம் நாரவாரிக்குப்பம் 4வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் கோடீஸ்வரன் மற்றும் காமராஜ் நகர் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி