சாலையில் கழிவு நீர் ஓடுவதால் நோய் தொற்றும் அபாயம்

73பார்த்தது
செங்குன்றம் நாறவாரி குப்பம் காமராஜ் நகர் மின்சார வாரியம் அலுவலகம் உள்ளது இந்த அலுவலகத்தை சுற்றியுள்ள தெருக்களில் கழிவு நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகின்றது.

பொதுவாக அந்த தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கூட இந்த வழியாக செல்ல வேண்டும் ஆனால் சாக்கடை நீரில் நடந்து கால்களில் சேற்று புன்கள் ஏற்படுவதால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அதன் அருகில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின்சார கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.

குறிப்பாக ஏராளமான வாகனங்கள் அந்த அணுகு சாலையில் செல்வதால் சாக்கடை நீர் ஆடைகளில் தெளித்து மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனை நோய் தொற்று அபாயம் ஏற்படுவதற்கு முன் உடனடியாக சீரமைத்து தர அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி