நண்பன் உடலை பார்த்து கதறிய தவெக புஸ்ஸி ஆனந்த்

76பார்த்தது
தவெக மாநாட்டு பணியை தீவிரமாக கவனித்து வந்த விஜய் மக்கள் இயக்க புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் நேற்று (அக்.21) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துடிதுடித்து போய் வெடித்து அழுதுள்ளார். பல ஆண்டுகளாக தன்னுடன் பயணித்தவரின் மரணத்தை தாங்க முடியாமல் கதறி அழுதார். நீண்ட கால நண்பன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் நின்ற அவரை அருகில் இருந்தவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி