சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் பூண்டி சோழவரம் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புழல் ஏரியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து பெய்யும்
மழை காரணமாக நீர்த்தேக்கங்களில் உபரி நீர் திறக்கப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார் பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில்
ஃபெங்கல் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது குறித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டதாகவும் கனமழையால் அதிக அளவில் பாதிக்கப்படும் இடங்களாக
திருவள்ளூர் மாவட்டத்தில் 133 இடங்கள் உள்ளதாகவும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கினால் உடனுக்குடன் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்
ஆட்சியரின் ஆய்வின்போது பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் மற்றும் வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.