கருப்பா நதி அணை பிசான சாகுபடிக்காக திறப்பு

78பார்த்தது
கருப்பா நதி அணை பிசான சாகுபடிக்காக திறப்பு
தென்காசி: கடையநல்லூர் அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையடிவராப் பகுதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை அமைந்துள்ளது. கருப்பா நதி அணையின் மூலமாக நேரடி மற்றும் மறைமுக பாசனம் வாயிலாக வைரவன் குளம், கிருஷ்ணாபுரம், இடைகால், சேர்ந்த மரம் மற்றும் வீரசிகாமணி உள்ளிட்ட 14 கிராமங்கள் மூலம் 9514 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது. தற்போது பல்வேறு இடங்களில் விவசாயிகள் பிசான சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில், விவசாயிகள் பயன்பாட்டிற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷார் திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி