திருப்பதி கோயிலுக்கு சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு

77பார்த்தது
திருப்பதி கோயிலுக்கு சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு
ஆந்திரா: சீனிவாசலு, தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று (ஜன. 15) சென்ற நிலையில் தலைமுடி காணிக்கை செலுத்திவிட்டு முதல் மாடியில் இருந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரின் 3 வயது மகன் சாத்விக், தடுப்பு கம்பியின் இடைவெளி வழியாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.