தமிழ்நாட்டில் பெற்ற மகளை அவரின் பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர் அதனை வீடியோவாக எடுத்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர். பணத்திற்காக பெற்ற மகளையே நாசப்படுத்திய கொடூர தாய் - தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.