விவசாயி கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட ரூ.16 லட்சம்

85பார்த்தது
விவசாயி கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட ரூ.16 லட்சம்
ராஜஸ்தான்: அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த கனராம் ஜாட் என்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.16 லட்சம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டது. இதுபற்றி பாங்க் ஆப் பரோடா மேலாளர் போலீசில் புகார் அளித்தார். இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கணக்கிற்கு அனுப்ப வேண்டிய பணம் தவறுதலாக கனராமின் கணக்கில் செலுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதனிடையே கனராம் அண்மையில் கணக்கில் இருந்து ரூ.15 லட்சத்தை எடுத்ததோடு, வங்கி அதிகாரிகள் கேட்டபோது தர மறுத்துள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி