அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

82பார்த்தது
மாதவரம் அசிசி நகரில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இதில் அந்த பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். மாதவரம் பால் பண்ணை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த இடம் அரசுக்கு தேவைப்பட்டது. இதன் காரணமாக ஆவின் பால் பண்ணை அதிகாரிகள் அரசு அனுமதி பெற்று அந்த இடத்தை மெட்ரோ ரயில் திட்டபணிக்காக பயன்படுத்த அவ்விடத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை அகற்ற முடிவு செய்து அதற்கான வேலைகளில் இன்று காலை ஈடுபட்டு ஜேசிபி வாகனம் மூலமாக கோயிலை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.
இதனை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை மற்றும் மாதவரம் வட்டாட்சியர் விக்னேஷ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் அரசு பணிக்காக இந்த இடம் தேவைப்படுவதால் அதனை கைப்பற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவும் எனவே நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் கோயிலை அகற்றாமல் அப்படியே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென அதிகாரிகளிடத்தில் கேட்டு முற்றுகையிட்டனர்
இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி