கேரளா: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், இமிகிரேஷன் புலனாய்வுப் பணியக பெண் அலுவலர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேகா என்ற பெண் ஊழியர் தன்னுடன் பணியாற்றி வந்த சக அலுவலரை காதலித்து வந்துள்ளார். அந்த அலுவலர் காதல் உறவில் இருந்து விலகியதால் மேகா தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடக்கிறது.