கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் பழையனூரைச் சேர்ந்த சிவா (40), கடந்த 20 வருடங்களாக பெங்களூரில் பலசரக்கு கடை நடத்திவருகிறார். நேற்று(மார்ச்.24) குடும்பத்தினருடன் வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற அவர், தரிசனம் முடிந்து இன்று அதிகாலை கீழே இறங்கியுள்ளார். அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து சிவா இறந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.