100நாள் பணியாற்றும் பெண்களை சந்தித்து குறைகள் கேட்பு-எம்எல்ஏ

78பார்த்தது
100நாள் பணியாற்றும் பெண்களை சந்தித்து குறைகள் கேட்பு-எம்எல்ஏ
சென்னை வடகிழக்கு மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், கர்லபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களை சந்தித்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனன் எடுத்துரைத்தார்.

அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்ததோடு அவர்களுக்கு அரிசி மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மோரை தயாளன் அவர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி