செங்குன்றம் அடுத்த அலமாதியில், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லுாரி உள்ளது. அதன் முதல்வர் முனைவர் ந. குமாரவேலு மற்றும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியர் சு. உஷா ஆகியோர் இணைந்து, 'தமிழக கால்நடைகள்' எனும் புத்தகத்தை எழுதினர்.
வேளாண்மையியல், கால்நடையியல் வகைப்பாட்டில், 2021ம் ஆண்டிற்கான சிறந்த நுாலாக 'தமிழக கால்நடைகள்' புத்தகம் அரசால் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான பாராட்டு சான்றிதழ், பரிசுத்தொகை 15, 000 ரூபாய் ஆகியவற்றை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கடந்த 14ம் தேதி முனைவர் ந. குமாரவேலுவுக்கு சென்னையில் வழங்கினார்.
தமிழகத்தின் காங்கேயம், உம்பலச்சேரி பகுதிகளில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகள், பர்கூர் மலை மாடு, செம்மறி யாடு உட்பட பல்வேறு நாட்டு ஆடு இனங்கள் மற்றும் கோழிகள், ஆரணி வாத்து, சிறுமலை குதிரை, கழுதை இனங்களின் வளர்ச்சி, அபிவிருத்தி, பராமரிப்பு குறித்து, பதிவு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகள் வளர்ப்போருக்கும், அதில் ஆர்வம் உள்ளோருக்கும், இந்த புத்தகம் உதவிகரமாக இருக்கும்.