பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளிப்பு

62பார்த்தது
பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளிப்பு
தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி சார்பில் அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளிப்பு

சென்னை செங்குன்றம் அடுத்த குழல் ஒன்றியம் தீர்த்த கரைம்பட்டு ஊராட்சியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு , 11ம் வகுப்பு, 10ம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி பரிசளிக்கும் விழா தீர்த்த கரைம்பட்டு சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.


சமூக சேவகர் டேவிட்சன் ஏற்பாட்டில் தீர்த்தக்கரையம் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக 3000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 2000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 1000 ரூபாயும் ஊக்க தொகையாக வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருண்குமார், புது வாழ்வு சமூக சேவை தொண்டு நிறுவனர் செங்குட்டுவன், வார்டு உறுப்பினர்கள் வளர்மதி ஈஸ்வரன், தரணிதரன், கீதா விஜி மற்றும் அகிலன், கதிரவன் பிரசாத், பால்ராஜ், மூர்த்தி, ஆல்பர்ட் வழக்கறிஞர் முரளி, ஊராட்சி செயலர் உல்லாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே வாழ்த்துரை வழங்கி 150 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும், புத்தக பையும் பரிசாக அளித்தனர்.

தொடர்புடைய செய்தி