திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டம்.

67பார்த்தது
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கும்மிடிபூண்டி மற்றும் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கும்மிடிபூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை. சந்திரசேகர் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 138 துவக்க விழாவை முன்னிட்டு நன்கொடை வசூலிப்பது, மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கும்மிடிபூண்டி நகரத்தலைவர் பிரேம்குமார், பொன்னேரி நகரத் தலைவர் ஜெய்சங்கர், வட்டாரத் தலைவர்கள் புருசோத்தம்மன், பெரியசாமி, செயசீலன், வினோத், குணசேகர், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி