எம்எல்ஏ தலைமையில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு

63பார்த்தது
எம்எல்ஏ தலைமையில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-155, இராமாபுரம், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு இன்று பெருநகர சென்னை மாநகராட்சி நிதி மூலம் 4 புதிய வகுப்பறைகள் மற்றும் எல் & டி தனியார் நிறுவனம் நிதி மூலம் 6 புதிய வகுப்பறைகள் கட்டித் தருவதற்கு இடத்தை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி மற்றும் எல் & டி குழுமத்தினர் தேர்வு செய்தனர். இந்நிகழ்வில் தலைமை பொதுக் குழு உறுப்பினர் இராமாபுரம் வ. செல்வகுமார், எம். சி. , பகுதி பொருளாளர் K. ராஜி, எம். சி. , வட்ட கழக செயலாளர் ஆ. ராதாசெல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி