நீட்டி நிற்கும் வடிகால் கம்பிகள் மரண பீதியில் வாகன ஓட்டிகள்

77பார்த்தது
நீட்டி நிற்கும் வடிகால் கம்பிகள் மரண பீதியில் வாகன ஓட்டிகள்
அய்யப்பன்தாங்கல், கொளுத்துவாஞ்சேரி-பரணிபுத்துார் யூனியன் சாலை குறுக்கே, பாதியில் விடப்பட்ட மழைநீர் வடிகாலில் நீட்டி நிற்கும் கம்பியால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் உள்ள பகுதிகளில், மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவது வாடிக்கை. இதையடுத்து, 100 கோடி ரூபாய் செலவில், போரூர் ஏரியை ஒட்டி கால்வாய்கள் அமைக்கப்பட்டன.

அத்துடன், மாவட்ட நிர்வாகம் சார்பில் மாங்காடில் இருந்து அய்யப்பன்தாங்கல் விஜயலட்சுமி நகர் வழியாக, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.

இந்த மழைநீர் வடிகால், கொளுத்துவாஞ்சேரி -- பரணிபுத்துார் யூனியன் சாலை குறுக்கே செல்கிறது.

இச்சாலையின் நடுவே, மழைநீர் வடிகால் முழுமையாக முடிக்கப்படாமல் பாதியில் விடப்பட்டுள்ளது. இதனால் நீட்டி நிற்கும் இரும்பு கம்பியால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, இந்த மழைநீர் வடிகால் பணிகளை முறையாக முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி