கும்மிடிப்பூண்டி துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டியில் இன்று (27-07-2024- சனி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இருந்து பெத்திக்குப்பம் ரெயில்வே மேம்பாலம் வரை உள்ள அனைத்து பகுதிகளிலும், தபால்தெரு, பெரியார் நகர், முனுசாமி நகர், தேர்வழி, குருசந்திரா நகர், ஆத்துப்பாக்கம், ரெட்டம்பேடு சாலை, பாலகிருஷ்ணாபுரம், மா. பொ. சி. நகர், வேற்காடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோழியம்பாக்கம் மங்காவரம், குருவிஅகரம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் மின்சப்ளை இருக்காது. இந்த தகவலை மின்துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.