கால்நடை மருந்தகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை

72பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையம் ஊராட்சியில் அங்குள்ள பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் 40 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு அதனை
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி அமைச்சர் ஆட்சியர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
கால்நடை மருந்தகம் திறந்து வைத்த சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் போதிய கால்நடை மருத்துவர்கள் மருந்துகள் முறையாக வழங்கப்படாமல் மருந்தகம் திறக்கப்படாமல் மூடியே உள்ளது இதனால் ஈகுவார் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த
20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயிகளின் கால்நடைகள் ஆடு மாடு கோழி உள்ளிட்டவைகள் நோய் பாதிப்புக்குள்ளாகும் போதும் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கால்நடை மருந்தகம் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டுள்ளதால் அங்கு மது அருந்திவிட்டு மதுபான பாட்டில்களை வீசி செல்லும் இடமாக தற்போது மாறி வருகிறது இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் கால்நடை மருந்தகம் திறக்கப்படவில்லை என்றும் அரசு கால்நடை மருந்தகத்தை திறந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி