கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 2 வது வார்டு சென்மேரிஸ் குறுக்குத் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியானது பேரூராட்சி அரசு ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான சுரேஷ் செய்து வருகிறார்.
இதனலையில் இன்று மாலை சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின் போது சாலையை ஒட்டி அமைந்துள்ள கால்வாய்களை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வந்துள்ளது இந்த பணிகளை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த சிவ சந்திரன் @ சதீஷ் (வயது 54) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், தீபன், ரமேஷ் ஆகிய நான்கு பேர் தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சென்றுள்ளனர்.
காலை தொடங்கி வேலை நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை சிமெண்ட் சாலை அமைக்க தயார்படுத்தப்படும் சாலையின் ஓரம் அமைந்துள்ள கால்வாய்களை சீரமைக்கும் பணியில் சிவ சந்திரன் @ சதீஷ் ஈடுபட்டுள்ளார் அப்போது கால்வாயில் அருகே அமைந்துள்ள சுமார் 5 அடி உயரம் கொண்ட மதில் சுவரானது சிவச்சந்திரன் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது உள்ளது இந்த விபத்தில் சிவச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.