ஏடிஎம்மில் நூதன திருட்டு: போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை

577பார்த்தது
ஏடிஎம்மில் நூதன திருட்டு: போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இல் நேற்று இரவு நூதன முறையில் பிளாஸ்டிக் அட்டையை பயன்படுத்தி வங்கி வாடிக்கையாளர்களின் பணம் திருடிய விவகாரத்தில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில புலம்பெயர் சிறுவனை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இரவு முதல் சிறுவனிடம் கிடுக்குபிடி விசாரணை என்பது நடைபெற்று வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தின் சாவி எப்படி சிறுவனின் கைக்கு வந்தது. வங்கி ஊழியர்கள் மற்றும் ஏடிஎம் பணம் நிரப்பும் ஏஜென்ட்கள் யாரேனும் தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 15 நாட்களாக இந்த சிறுவன் ஆவடி பகுதியில் சுற்றி வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், நேற்று மட்டும் நேற்று இரவு 1லட்ச ரூபாய் அளவிற்கு பணம் கைப்பற்றப்பட்ட நிலையில். வேறு ஏதேனும் ஏடிஎம்களில் இதேபோல் நூதன கொள்ளையில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி