பட்டப்பகலில் 15 சவரன் தங்க நகை திருடியவர் கைது

1547பார்த்தது
திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் பிரகாஷ் நகர் நாகாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் அலமேலு மங்கை/43.இவரது, கணவர் முருகேசன்/45 பெட்ரோல் பங்க் ஊழியர். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.மகள்,மகன் இருவரும் கல்லூரி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அலமேலு மங்கை கடந்த ஏப்ரல் 1ம் தேதி மகளுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது கணவர் மற்றும் மகனும் வீட்டில் இருந்துள்ளனர்.இதன் பிறகு கடந்த ஏப்ரல் 4ம் தேதி,முருகேசன் வழக்கம்போல் வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் அருகே வைத்து சென்றார்.அன்று மாலை, அவரது மகன் கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோ கைப்பிடி உடைந்த நிலையில் லாக்கர் திறக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகை மற்றும் 90,000 பணம் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை பூட்டிய படி இருந்த நிலையில் குழம்பிப்போன வீட்டின் உரிமையாளர் முருகேசன்.

உடனடியாக நடந்த திருட்டுசம்பவம் குறித்து 100 காவல் கட்டுப்பாட்டறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் கை ரேகையை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆவடி காந்திநகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார்/25 என்பவனை சந்தேகித்து நோட்டமிட்டு அதே பகுதியை நீண்ட நாட்களாக சுற்றி வந்ததும் தெரிய வந்தது. மது போதையில் சுற்றித்திரிந்த அவரை கைது செய்த திருநின்றவூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாய்கனேஷ். அவனிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன..

ஆவடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருடு நடைபெற்ற வீடு அமைந்துள்ள தெருவில் வசித்து வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் இருந்த நபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில். இந்த வீடு குறித்து நன்கு அறிந்த நிலையில் வீட்டிற்கு உள்ளே நுழைந்த திருடன் ஜன்னல் அருகில் வைத்திருந்த வீட்டின் சாவியை எடுத்து சர்வ சாதாரணமாக வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறக்க முயற்சித்துள்ளார். பின்னர் அங்கு இருந்த பீரோவின் சாவியை எடுத்து பீரோவில் இருந்த நகைகள்,பணத்தினை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார். மேலும் கொள்ளையடித்த நகைகளை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்க வீட்டின் கழிவறையில் வைத்து தேவையான போது நகைகளை எடுத்து அடமானம் வைத்து குடித்து ஜாலியாக இருந்துவந்துள்ளது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் போலீசார் தன்னை பிடித்தால் நகை கிடைக்க கூடாது என செலவழித்து போக மீதம் இருந்த நகைகளை கழிவு நீர் தொட்டியில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல் இருந்தது வந்துள்ளார். இந்த நிலையில் அந்த கழிவு நீர் தொட்டியை உடைத்து நீரை வெளியேற்றி அதிலிருந்த 15 சவரன் நகை, 65 கிராம் வெள்ளி பொருட்களை மீட்ட போலீசார்,நகை கடைகளில் அடமானம் வைத்திருந்த நகைகளையும் மீட்டுள்ளனர்.மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக ரஞ்சித் பட்டாபிராம் பகுதியில் பெண்ணிடம் பணம் பறித்த வழக்கில் சிறை சென்றதும் தெரியவந்தது.இதன் பின்னர் வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.கவனக்குறைவாக வீட்டின் சாவியை ஜன்னல் ஓரமாக வைத்த காரணத்தால் அதை நோட்டமிட்ட திருடன். எடுத்து சாவகாசமாக நகைகளை திருடி கழிவுநீர் தொட்டியில் நகைகளை வீசி விட்டு சுற்றி திரிந்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி