குடும்ப அட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைப்பு

64பார்த்தது
சென்னை உள் வட்ட சுற்றுச்சாலை திட்டப் பணிக்காக கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில் உள்ள சுமார் 5 ஏக்கர் கல்லாங்குத்து நிலத்தில் குவாரி அமைப்பதற்காக மாவட்ட கனிமவளத்துறை அனுமதி வழங்கிய நிலையில் கடந்த 24 ஆம் தேதி கிராவல் மண் எடுக்க லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன்,

குவாரி உரிமையாளர் எனக் கூறிக்கொண்டு அங்கு வந்த சிலர் சாதி ரீதியாக பேசியதாக இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் குவாரிக்கு வந்த லாரிகளை போராட்டம் நடந்தவர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் தற்காலிகமாக குவாரி பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில்

கிராம மக்களின் எதிர்ப்பயும் மீறி மீண்டும் இன்று குவாரி அமைக்க பணிகள் நடைபெறுவதாக கூறி கரடி புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த
நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலர் ஜான் பிரிட்டோமிடம் ஒப்படைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். அரசுடைமைகளை ஒப்படைக்கும் இந்த போராட்டத்தால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.


மேலும் குவாரி அமைக்கும் இடத்தில் குடிமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த பொதுமக்கள், தங்களின் கணவர்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் பகிரங்கமாக தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி