நடிகர்களை தலைவர்களாக ஏற்க மாட்டார்கள் பாஜக இளைஞரணி தலைவர்

51பார்த்தது
தமிழக பாஜகவின் செயற்குழுக் கூட்டம் வரும் 6ஆம் தேதி மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரூ வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் சிவாரஜ் சிங் செளகான், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் மொத்தம் 5, 000 பேர் பங்கேற்கவுள்ளனர்.
நீட் தேர்வு பற்றி கருத்து சொல்லும் விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும். எதற்காக நீட் வேண்டாம் என்று பத்திரிகையாளர்கள் விஜயிடம் கேட்க வேண்டும். குறிப்பாக நீட் வேண்டாம் என்பதற்கு விஜய் 3 காரணங்களை கூற வேண்டும். நடிகர்களை திரையில் பார்த்து ரசிக்கத் தயாராக இருக்கும் மக்கள், ஏமாந்து அவர்கள் பின்னால் செல்ல தயாராக இல்லை. தமிழகத்திற்கு தேவையான நல்ல தலைவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள். அவர்கள் தலைமையில் 2026ல் தமிழகத்தில் நல்லாட்சி அமையப்போகிறது. எனவே விஜய் அவருக்கு முன்னால் அரசியலுக்கு வந்த நடிகர் உதயநிதி போல பேசாமல், ஆராய்ந்து உண்மைத் தன்மையை புரிந்துகொண்டு பண்போடு பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி