கும்முடிப்பூண்டி அருகே இரு வாகனங்களை மறித்த திருவள்ளூர் தனிப்படை போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர்.
அந்த வாகனத்தில் குட்கா பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்து 10,800 கிலோ குட்கா மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஏஜென்சி மூலம் டெல்லியின் நொய்டாவில் இருந்து குட்கா வாங்கப்பட்டது தெரியவந்தது.