கேலோ இந்தியா ரக்பி லீக் ஆவடி அரசு பள்ளி சாம்பியன்

60பார்த்தது
கேலோ இந்தியா ரக்பி லீக் ஆவடி அரசு பள்ளி சாம்பியன்
இந்திய ரக்பி கால்பந்து யூனியன் சார்பில், பெண்களுக்கான, கேலோ இந்தியா மகளிர் லீக் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், படூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்து வருகிறது.

சப் - ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என, மூன்று பிரிவுகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. நேற்று முன்தினம் துவங்கிய சப் - ஜூனியருக்கான ஆட்டத்தில், ஆவடி அரசு பள்ளி உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.

அனைத்து போட்டிகள் முடிவில், ஆவடி அரசு பள்ளி முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தொடர்ந்து, சென்னை டிரஸ்ட் பள்ளி, செம்மஞ்சேரி போலீஸ் பாயிஸ் கிளப் அணிகள் அடுத்தடுத்த இடங்களை வென்றன.

நேற்று நடந்த 18 வயதினருக்கான முதல் போட்டியில், ராணி மேரி அணி, 25 - 0 என்ற கணக்கில் கிருஷ்ணசாமி அணியையும், பெங்களூரு ரக்பி கிளப் அணி, 50 - 0 என்ற கணக்கில் ஜேப்பியார் அணியையும் தோற்கடித்தன. மற்றொரு ஆட்டத்தில், டான் பாஸ்கோ அன்பு இல்லம், 30 - 0 என்ற கணக்கில் எம். ஜி. ஆர். , ஜானகி அணியை வீழ்த்தியது.

டேக்ஸ் :