பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இருவர் மீது புகார்

81பார்த்தது
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இருவர் மீது புகார்
திருமுல்லைவாயல் அடுத்த அய்யாப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 33. இவரது கள்ளக்காதலி நித்யா, 33. இருவரும் திருமுல்லைவாயல் பகுதியில், 'நியோ பிட்னஸ் ஜிம்' நடத்தி வருகின்றனர்.

இந்த ஜிம்மில் கடந்தாண்டு, கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண், சிவகுமாருடன் நெருக்கமாக பழகியுள்ளார். இவர்கள் தனிமையில் இருக்கும்போது நித்யா வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து, நித்யாவும் சிவகுமாரும் சேர்ந்து, அந்த பெண்ணிடம் மிரட்டி அடிக்கடி பணம் பறித்துள்ளனர்.

இது குறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். அதன்படி தலைமறைவான சிவக்குமார், நித்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி