திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகன் கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இங்கு ஆடி கிருத்திகையை வெகு சிறப்பாக கொணடாடப்படும்.
இந்நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29ஆம் தேதி உள்ளூர விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அனுசரிக்கப்படும்.