தமிழ்நாடு தொழில் முறை தகுதி பதிவு பெற்ற யோகா ஆசிரியர்கள் நல சங்கம் மற்றும் இமயம் யோகா பயிற்சி மையம் இணைந்து நடத்தும் தென் மாவட்ட அளவிலான முதலாவது யோகாசன போட்டிகள் 2024 நெல்லையில் நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.