திருநெல்வேலி அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் இன்று(செப்.6) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா சிற்றாறு பட்டணம் கால்வாயில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த நிகழ்வின் பொழுது அதிமுக நிர்வாகிகள் ஜான்சி ராணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.