சமீபத்தில் பெய்த கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட குமாரபுரம் பஞ்சாயத்தை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அதற்காக தமிழக அரசால் வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகை ரூ. 6000/-வழங்க கோரி தமிழக அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் ஆகியோரை இன்று குமாரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பிரின்ஸ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சந்தித்து 6 ஆயிரம் ரூபாய் மக்களுக்கு அளிக்க வலியுறுத்தினர்