சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தியும் நெல்லை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலருமான ஆறுமுக செல்வியின் மகன் கிரன் பிரசாத்-செண்பகதாரிணி. இவரின் திருமணவிழா நெல்லை பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி அன்னை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர் கார்த்திகேயன் இன்று(செப்.5) நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.