நெல்லை அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவை சேர்ந்த மணியின் மனைவி சண்முக வேலம்மாள் கடந்த 12ம் தேதி வேலைக்கு சென்று விட்டு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 34 கிராம் தங்க நகைகளை காணவில்லை. இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தேன்மொழி மகேஸ்வரி ஆகிய இருவரும் மணியிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.