நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக அப்துல் வகாப் எம்எல்ஏ சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் முன்னாள் எம்எல்ஏ திமுக வர்த்தக அணி நிர்வாகி மாலை ராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர்கள் இருவரும் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இரு அணிகளாக செயல்பட்டனர். உட்கட்சி பூசலால் ஏற்கனவே பதவி இழந்த அப்துல்வகாப் மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.