நெல்லை வட்டாட்சியர் அலுவலகங்களில் தலைமை நில அளவையாளராக பணியாற்றி வரும் மாரியப்பன் பொதுமக்களிடம் அதிக அளவு லஞ்சம் பெறுவதாகவும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தது. தொடர் விசாரணைக்கு பின் தற்போது போலீசார் மாரியப்பன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ண ஜெயந்தி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.